ஆஸி.யில் மேலும் ஒரு இந்தியர் மீது தாக்குதல்
மெல்போர்ன்: சற்றும் குறையாத வகையில் தொடர்ந்து இந்திய டாக்சி டிரைவர்கள் ஆஸ்திரேலியாவில் சரமாரியாக தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மாதம் மெல்போர்ன் நகரில் ஒரு இந்திய டாக்சி டிரைவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மாதம் 9ம் தேதி மெல்போர்ன் நகருக்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. கத்தியால் குத்தப்பட்ட இந்தியரின் பெயர் ரவீந்தர் சிங். அவரது விலாப் பகுதியில் கத்திக் குத்து விழுந்தது. இதில் அவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார்.
அவரை மீட்டு போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர் போலீஸாரிடம் கூறுகையில், தன்னை ஒரு நபர் கத்தியால் குத்தியதாக தெரிவித்த பிறகுதான் இது சாதாரண சண்டை அல்ல, இனவெறித் தாக்குதல் என்று தெரிய வந்தது. ஆனால் போலீஸ் தரப்பில் இதை இனவெறித் தாக்குதலாக கூறவில்லை.
சம்பவத்தன்று நள்ளிரவு 1.50 மணிக்கு தனது காதலியின் வீட்டுக்கு அருகே காருடன் காத்திருந்தார் சிங். அப்போது வேகமாக வந்த ஒரு கார், சிங்கின் கார் மீது மோதி நின்றது. பின்னர் அதிலிருந்து இறங்கிய வெள்ளையின நபர் ஒருவர், சிங்கைக் கத்தியைக் காட்டி பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.
சிங் தர மறுக்கவே அந்த நபர் கத்தியால் குத்திக் காயப்படுத்தி விட்டு ஓடி விட்டார்.
கடும் காயத்தில் துடித்த சிங், சுதாரித்துக் கொண்டு அந்த காரின் எண்ணை பார்த்தார். பின்னர் சிகிச்சைக்குப் பிறகு கார் எண்ணை போலீஸாரிடம் தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையில் அந்தக் கார், பிரன்ஸ்விக் பகுதியில், ஒரு பழைய கார் ஷெட்டில் விடப்பட்டது தெரிய
வந்தது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து இந்திய டாக்சி டிரைவர்கள் சரமாரியாக தாக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த மாதம் ஒரு இந்தியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் இப்போது தெரிய வந்து மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications