இன்று முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்!
நாமக்கல்: தமிழகம்-கேரளம் இடையிலான எல்பிஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நடந்த தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரளத்தில் கடந்த 31ம் தேதி எல்பிஜி டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. இது தொடர்பில் லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் (304) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக வாகன விபத்து நடந்தால் ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்படும். ஆனால், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கேரளத்தில் மட்டும் கடுமையான பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஜாமீனில் வரக்கூடியதாக மாற்ற வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதையொட்டியே இந்த ஸ்ட்ரைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications