எஸ்ஐ கொலை: தேடப்பட்ட என்ஜினியர் சரண்
பூதபாண்டி: ஆழ்வார்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ கொலை வழக்கில் தேடப்பட்ட பொறியாளர் ஒருவர் பூதபாண்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஆழ்வார்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ வெற்றிவேல் கடந்த 7ம் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கடையம் எஸ்.ஐ சிவசுப்பிரமணியனின் மனைவி உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தார்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் குமரி மாவட்டம் பூதப்பாண்டி குற்றவியல நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
இவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சாந்தி செழியன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து முருகன் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். முருகன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கந்தசாமியின் தம்பி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications