நளினியை விடுதலை செய்ய ஆலோசனை குழு பரிந்துரை?

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நளினியை விடுதலை செய்யலாம் என சிறை ஆலோசனைக் குழு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. அரசிடம் தனது அறிக்கையை இன்று சிறை ஆலோசனைக் குழு அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறை வாசத்தின்போது நளினி நன்னடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து வந்துள்ளதாக சிறைக் கண்காணிப்பாளர் தனது அறிக்கையில், சிறை ஆலோசனைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இதுதவிர நளினி சிறையில் 19 ஆண்டுகளைக் கழித்துள்ளதையும் சிறை ஆலோசனைக் குழு தனது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இதுதவிர நளினிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதையும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் குழு பரிசீலித்துள்ளதாம்.
அதேபோல, நளினியின் கணவர் முருகன் தூக்குத் தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருப்பதையும் பரிசீலித்து நளினியை முன்கூட்டியே விடுவிக்கலாம் என்ற பரிந்துரையை அரசுக்கு குழு தெரிவிக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த அறிக்கையின் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும். இந்தப் பரிந்துரையை அரசு கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எனவே இந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் முடிவை அனைத்துத் தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
நளினியை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தால் அதற்கு தமிழக காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. எனவே தமிழக அரசின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு அமைக்கப்பட்ட சிறை ஆலோசனைக் குழுக்கள் நளினியை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசிடம் அறிக்கை கொடுத்து வந்தன. தற்போதுதான் முதல் முறையாக சாதகமான முறையில் பரி்ந்துரைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications