மலேசியா-FICCI 13 ஒப்பந்தங்கள்: கமல், மலேசிய அமைச்சர் கையெழுத்து
சென்னை: சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்புக்கும் (FICCI), மலேசிய அரசுக்கும் இடையே 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
FICCI சார்பி்ல் அதன் கேளிக்கைப் பிரிவு தலைவர் நடிகர் கமல்ஹாசனும், மலேசிய அரசு சார்பில் அதன் அமைச்சர் டத்தோ சுப்ரமணியமும் கையெழுத்திட்டனர். மலேசியா பிரதமர் நஜீப் பின் துன் ரஸ்ஸாக் முன்னிலையில் இது நடைபெற்றது.
மலேசியப் பிரதமர் ரஸ்ஸாக் சென்னை வந்துள்ளார். அவரது வருகையின் ஒரு பகுதியாக ஃபிக்கிக்கும், மலேசிய அரசுக்கும் இடையே, திரைப்படம், உயிரி வேதியியல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதுதொடர்பான ஒப்பந்தங்களில் கமல்ஹாசனும், டத்தோ சுப்ரமணியமும் கையெழுத்திட்டனர்.
பின்னர் கமல்ஹாசன் பேசுகையில், இது நீண்ட பயணத்திற்கான ஒரு ஆரம்பம்தான். மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பலமான அஸ்திவாரமாக இது அமைந்துள்ளது.
இந்த சரித்திர நிகழ்வில் நானும் பங்கேற்க வாய்ப்பளித்த ஃபிக்கிக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications