கல்வி அதிகாரிகள் குறித்து அவதூறு தட்டி போர்டு - தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு
நெல்லை: கருங்குளம் கல்வி அதிகாரி குறித்து அவதூறு பரப்பும் விதமாக தட்டி போர்டு வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்குலம் உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகன், கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன். இவர்கள் இருவரை பற்றியும் செய்துங்கநல்லூரில் தட்டி போர்டு வைக்கப்பட்டது.
இதில் அவதூறான வாசகங்கள் இடம் பெற்றிருப்பதாக கருங்குளம் உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகன் செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
மேலும் செய்துங்கநல்லூர் முகைதீன் மஸ்திஸ் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபக்குமார், தாளாளர் ஹத்தாது ஆகியோர் தூண்டுதலின் பேரில் இதே பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர் மூலம் தட்டி போர்டு வைக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஜெபக்குமார், தாளாளர் ஹத்தாது, மாயாண்டி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications