இந்திய இல்லத்தரசிகள் காசின் அருமை தெரி்ந்தவர்கள் - ப.சிதம்பரம் பாராட்டு

ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர் ரஞ்சய் குலாத்தி "Reorganise for Resilience" என்ற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடந்தது.
விழாவில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவில் உள்ள சராசரி குடும்பத் தலைவிகளின் பட்ஜெட் மிகவும் சிக்கணமானது. அதை நீட்டித்து செலவைக் கூட்ட வழியே இருக்காது.
இந்தியக் குடும்பத் தலைவிகள் மிகவும் சிக்கணமானவர்கள். காசின் அருமை புரிந்தவர்கள். செலவழிப்பதற்கு முன்பு நிரம்ப யோசிப்பவர்கள். தேவையில்லாத செலவுகளை ஊக்குவிக்க மாட்டார்கள். சேமிப்பின் அருமை புரிந்தவர்கள்.
இதேபோல ஒவ்வொரு நிறுவனமும் செயல்பட்டால் நிச்சயம் ஆண்டு தோறும் நிறைய லாபத்தைப் பார்க்க முடியும்.
கொள்கைகளை வகுத்துக் கொண்டு நிறுவனங்களை நடத்துவது கடினம். அதேசமயம், நமது நிஜ வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்களை வைத்து நிறுவனங்களில் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தினால் நமக்குக் கிடைப்பது நிறைய அனுகூலம் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications