மு.க. ஸ்டாலின் விழா அழைப்பிதழில் ஜெ. பெயர் புறக்கணிப்பு!
தேனி: தேனி அருகே லட்சுமிநாயக்கன்பட்டியில் நடைபெற உள்ள சமுத்துவபுரம் திறப்பு விழாவில் ஆண்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதாவின் பெயர் அழைப்பிதழில் திட்டமிட்டப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிமுக மாவட்ட நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேனி மாவட்டம் லட்சுமிநாயக்கன்பட்டியில், சமத்துவபுரம் திறப்பு விழா மற்றும் பல்வேறு அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இந்த விழாவிற்கு அரசு சார்பில் அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில், பெரியகுளம் எம்.பி. ஆரூண், தமிழக அரசு டெல்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், எம்.எல்.ஏ -க்கள் ஓ.பன்னீர்செல்வம், லட்சுமணன், கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. மூக்கையா மற்றும் பல்வேறு உள்ளாட்சி பிரதிநிதிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த அழைப்பிதழ்கள் உரிய முறையில் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகின்றது.
ஆனால் ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ-வும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா பெயர் அழைப்பிதழில் அச்சிடப்படவில்லை என்றும், அவருக்கு முறையாக அழைப்பிதழ் அனுப்படவில்லை என்றும் அதிமுக மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.












Click it and Unblock the Notifications