ஓவியர் எம்.எப். ஹூசேன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்

இந்து தெய்வங்களை நிர்வாண கோலத்தில் வரைந்ததால் பெரும் சர்ச்சையில் சிக்கினார் ஹூசேன். அவர் மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு கோர்ட்களில் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார். சமீபத்தில் அவர் கத்தார் நாட்டுக் குடியுரிமையை பெற்றார். தனது இந்திய பாஸ்போர்ட்டையும் திரும்ப ஒப்படைத்து விட்டார்.
இந்த நிலையில், ஹூசேன் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
வழக்கை விசாரித்த பெஞ்ச், தற்போது தோஹாவில்தானே இருக்கிறார் ஹூசேன். அவருக்கு இதனால் என்ன பிரச்சினை வந்து விட்டது என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், ஹூசேன மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு மத்திய அரசுக்கோ பிறருக்கோ உத்தரவிட முடியாது. காரணம், இந்த வழக்குகள் அனைத்தும் தனி நபர்களால் போடப்பட்டவையாகும். எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில பாந்தர்ஸ் கட்சி தலைவர் பீம் சிங் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
தனது மனுவில், ஹூசேனை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார் பீம் சிங்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு வெளியே வசித்து வருகிறார் ஹூசேன் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications