கோஷ்டி தகராறு - நாகையில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்டார்
நாகை: கோஷ்டி தகராறு காரணமாக நாகையில் பாஜக மாவட்ட இளைஞரணித் தலைவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை பல்லவராயன் பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன்(36); பாஜக மாவட்ட இளைஞர் அணி தலைவர்.
இவர், மயிலாடுதுறை நகர தலைவர் பதவிக்கு கட்சித் தலைமையிடம் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, தனது ஆதரவாளருக்கு நகர தலைவர் பதவியை பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், இளவரசன் மனு தாக்கல் செய்ததால் ஆத்திரமடைந்த நாஞ்சில் பாலு, அவரது ஆதரவாளர்கள் சிற்றரசு(30), முருகன்(28), மணி(33), சேகர்(38) ஆகியோர் அங்காடி தெருவில் நின்று கொண்டிருந்த இளவரசனை தாக்கினர்.
இளவரசனை அரிவாளால் தலையில் வெட்டி, இரும்பு செயின், உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கினர்.
படுகாயமடைந்த இளவரசன், மயிலாடுதுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மயிலாடுதுறை போலீசார், நாஞ்சில் பாலுவின் ஆதரவாளர்களை கைது செய்து, தப்பியோடிய மாவட்ட தலைவரை தேடி வருகின்றனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications