பென்னாகரம் தேர்தல் முறையாக நடந்துள்ளது: அன்புமணி பேட்டி
சேலம்: பென்னாகரம் தேர்தல் முறையாக நடந்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் நேற்று திமுக - பாமகவினர் இடையே நடந்த மோதல் மற்றும் போலீஸ் தடியடி சம்பவங்களில் மேச்சேரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜா, கோல்காரனூரை சேர்ந்த மணிவண்ணன் உள்பட 15 பாமகவினர் காயம் அடைந்தனர்.
அவர்களில் மணிவண்ணன், ராஜா உள்பட சிலர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களை பாமக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி நேற்று இரவு பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில்,
'எங்கள் கட்சி தொண்டர்களை போலீசார் கடுமையாக அடித்துள்ளார்கள். இதில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலையில் அடி விழுந்தது. முன் அறிவிப்பு இல்லாமல் இப்படி லத்தி சார்ஜ்' செய்துள்ளார்கள்.
இதுகுறித்து நாங்கள் சென்னை, டெல்லி மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளோம்.
பென்னாகரம் தேர்தல் கள்ள ஓட்டுகள் இல்லாமல் முறையாக நடந்துள்ளது. தேர்தலை அதிகாரிகள் கண்காணிப்பு காமிரா வைத்து பார்த்தார்கள்.
ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் படலம், தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிந்த பிறகு வாக்களித்தவர்களுக்கு சில இடங்களில் பணமும் வழங்கப்பட்டுள்ளது. 80 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதால் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications