காலாவதி மருந்து வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற அரசுக்கு போலீஸ் கமிஷனர் பரிந்துரை

காலாவதியான மருந்து, மாத்திரைகளுக்கு வேறு லேபிள் ஒட்டி மிகப் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கொடுமையான செயலுக்கு ஒரு சிறுமி உயிரிழந்துள்ளாள். இதைத் தொடர்ந்து மோசடிக்காரர்கள் மீது போலீஸ் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் போலீஸாரும், மருந்துக் கழக அதிகாரிகளும் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதில் ரூ. 16 கோடிக்கும் மேலான காலாவதியான மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கர், உதவி கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சாம்வின்சென்ட், பொன்ராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 100 போலீசார் அடங்கிய 13 தனிப்படையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
சென்னையில் மட்டும் இதுவரை 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கியமானவர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் சேகர். மீனா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தின் அதிபர்தான் மீனாட்சி சுந்தரம். இவர் உள்ளிட்ட நான்கு பேர் கோர்ட்டில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் தவிர மிக முக்கியப் புள்ளியான பிரதீப் சோர்டியா என்பவரை சமீபத்தில் விமான நிலையத்தில் வைத்து போலீஸார் மடக்கிப் பிடித்தனர். தற்போது இவருடைய மைத்துனரையும் கைது செய்துள்ளனர்.
அந்த நபரின் பெயர் ராஜேஷ் மேத்தா (30). சோர்டியாவோடு இணைந்து மருந்து மோசடியில் இடம் பெற்றிருந்தார். மீனாட்சி சுந்தரத்திடம் மருந்து சப்ளை செய்ததில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். அரும்பாக்கத்தில் உள்ள குருதேவ் மருந்துகடை இவரது கடைதான்.
இந்நிலையில் காலாவதி மருந்து வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றுமாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் மூலம் விரிவான விசாரணை நடத்துவது சாத்தியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று கருதப்படுகிறது.
காலாவதி மருந்து-சோர்டியாவின் மைத்துனர் கைது
இந் நிலையில் காலாவதி மருந்து, மாத்திரைகளை விற்ற வழக்கில் ஏற்கனவே கைதாகியுள்ள முக்கியப் புள்ளி பிரதீப் சோ்ர்டியாவின் மைத்துனரையும் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். அதேசமயம், இன்னொரு முக்கியப் புள்ளியான சஞ்சய் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
இன்னொரு மார்வாடி குடும்பத்துடன் ஓட்டம்:
இதற்கிடையே மோசடி வழக்கில் முக்கியப் புள்ளியான ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய்குமார் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளோடு சொந்த மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார்.
இவர் சென்னை எழும்பூர் ஆராமுதன் கார்டன் தெருவில் வசித்து வந்தார். அங்குள்ள அவரது மருந்து குடோனில்தான் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்துகள் ஏற்கனவே கைப்பற்றப்பட்டுள்ளன.
சஞ்சய்குமார்தான் காலாவதி மருந்துகளை வாங்கி புதிய மருந்தாக மாற்றி தயாரித்து வந்தவர் ஆவார். அவரது குடோன், அலுவலகம், வீடு ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிரோடு விளையாடி கோடி, கோடியாக மோசடி பணத்தை அள்ளியதில் இவருக்குத்தான் முக்கிய பங்கு உள்ளது.
போலி மருந்து வாங்க வந்தவர் கைது
இதற்கிடையே, இந்தக் கெடுபிடியான நேரத்திலும் கூட காலாவதியான மருந்துகளை வாங்க வந்த மணி செட்டியார் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
சஞ்சய்குமாரின் அலுவலகத்திற்கு மருந்து வாங்க வந்தபோது போலீஸாரிடம் இவர் பிடிபட்டார். இவருக்கு வயது 70 என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய்குமாரிடம் காலாவதியான மருந்துகளை வாங்கி திருநின்றவூர் பகுதி கடைகளுக்கு இவர் சப்ளை செய்து வருகிறாராம். 2 வருடமாக இந்த அக்கிரமச் செயலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீஸ் நடவடிக்கையில் இதுவரை ஒரு மருந்து நிறுவனம், 4 கிட்டங்கிகள், 4 மருந்துக் கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
ரூ24000 காலாவதி மருந்துகள் பறிமுதல்-3 பேர் கைது:
இதற்கிடையே, நான்குநேரி அருகே நம்பியாற்றில் காலாவதியான மருந்துகளை கொட்டியது தொடர்பாக மருந்து கடைக்காரர்கள் இருவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்படி கடைகளில் இருந்து ரூ.24 ஆயிரம் மதிப்பிலான மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நான்குநேரி வள்ளியூர் மெயின் ரோட்டில் உள்ளது நம்பியாறு பாலம். இப்பகுதியில் ரோட்டோரம் நேற்று முன்தினம் காலாவதியான மருந்துகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு கிடந்தது. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகளவில் உள்ள நம்மியாற்று பாலத்தில் மருந்துகள் குவியல் குவியலாக கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தை நான்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் பார்வையிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக நான்குநேரி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நான்குநேரி மெயின்ரோட்டில் மருந்து கடை வைத்திருக்கும் ஜீவா, ராஜன், மற்றும் ஊழியர் இசக்கி்முத்து ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக டிஎஸ்பி உதயகுமார் கூறுகையில், நான்குநேரி அருகே நம்பியாற்றில் கரையோரமாக காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்ட சம்பவம் குறித்து நான்குநேரி ஏர்வாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக எஸ்பி ஆஸ்ரா கர்க் நேரடி விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் நான்குநேரி பகுதியை சேர்ந்த மெடிக்கல் ஸ்டோரில் இருந்துதான் கொட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜீவா என்பவரின் மெடிக்கல் ஸ்டோரில் சோதனை போட்டபோது 4 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜன் கடையில் சோதனையிட்டதில் 20 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களையும் கடை ஊழியர் இசக்கி முத்துவையும் கைது செய்துள்ளோம் என்றார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications