மகன் தயாநிதிக்கு விருது – மதுரையிலிருந்து குடும்பத்துடன் வந்த முக அழகிரி!

6-ம் ஆண்டில் அடியெடுத்து ஆங்கில மாத இதழான ரிட்ஸ் இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து இந்த ஐகான் விருதுகளை வழங்குகியுள்ளது.
2010-ம் ஆண்டுக்கான ரிட்ஸ் ஐகான் விருதுகள் இயக்குநர் செல்வராகவன், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, கிராமி விருது பெற்ற முதல் இந்திய இசைக் கலைஞர் தன்வி ஷா, ரேஸ் சாம்பியன் கருண் சந்தோக், ஃபேஷன் டிசைனர் சைதன்ய ராவ், இசைக் கலைஞர் அனில் சீனிவாசன், இளம் தொழிலதிபர் சரத் பாபு, பவுன்ஸ் சலூன் விக்ரம் மோகன், ஈவாம் தியேட்டர் குரூப் சுனிஷ் விஷ்ணு மற்றும் கார்த்திக் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஓட்டல் விருது தாஜ் குழும ஓட்டல்களுக்கும், சிறந்த திரையரங்காக சத்யம் சினிமாஸ், சிறந்த ஸ்பா மையமாக ஏசியானா ஓட்டலின் பிரானா ஸ்பாவும், சிறந்த உணவுக்கு ஜிஆர்டி ராடிஸனும் சிறந்த காலணிகளுக்கு மெட்ரோ ஷூஸ் கடையும் தேர்வு செய்யப்பட்டு விருதளிக்கப்பட்டது. சிறந்த ராக் இசைக்கு பார்க் ஷெராட்டான் ஓட்டல் விருது பெற்றது.
விருது வழங்கும் விழாவை மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் முக அழகிரி துவங்கி வைத்தார். இயக்குநர் செல்வராகவனுக்கு அவர் விருது வழங்கினார்.
தன் மகன் தயாநிதி அழகிரி விருது பெறுவதைக் காண ஆசைப்பட்டு மதுரையிலிருந்து விழாவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
திரைத்துறையில் தயாரிப்பாளராக ஆன பிறகு தான் வாங்கும் முதல் விருது இதுதான் என்றார் தயாநிதி அழகிரி.
லீ ராயல் மெரிடியனில் நடந்த இந்த விழாவில், ஏராளமான திரையுலக மற்றும் தொழில் துறை விஐபிக்கள் பங்கேற்றனர். அனைவரையும் பிஆர்ஓ ஏ ஜான் வரவேற்றார்.
ரிட்ஸ் ஆசிரியரும் வெளியீட்டாளருமான அருணா கிருஷ்ணன் விருது பெற்றவர்களை வாழ்த்தி, நன்றி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications