கிஷன்ஜி சாகவில்லை- பத்திரமாக இருக்கிறார்: மாவோயிஸ்டுகள்
கொல்கத்தா: கிஷன்ஜி காயமடையவில்லை. பத்திரமாக இருக்கிறார் என்று மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கையில் இறங்கினர். மார்ச் 24ம் தேதி லால்கர், சல்போனி, லக்கான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரத் தாக்குதல் நடந்த்து.
இந்தத் தாக்குதலில் மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. அவர் கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறின. இருப்பினும் இவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் கிஷன்ஜி உயிருடன் இருப்பதாகவும், அவர் காயமடையவில்லை என்றும் நக்சலைட்டுகள் அறிவித்துள்ளனர்.
சட்டிஸ்கரில் மிகக் கொடூரமாக 83 சிஆர்பிஎப் படையினரைக் கொன்று குவித்த சில மணி நேரங்களில் கிஷன்ஜி உயிருடன் இருக்கும் தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மாவோயிஸ்டுகள் அனுப்பியுள்ள பேக்ஸ் செய்தியில், எங்களது அமைப்பின் மாநிலக் கமிட்டி, மத்திய கமிட்டி, பொலிட்பீரோ ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருக்கும் ஒருவர் கூட காயமடையவில்லை அல்லது இறக்கவும் இல்லை.
மார்ச் 24ம் தேதி பாதுகாப்புப் படையினர் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் அப்பாவி மக்கள்தான் உயிரிழந்துள்ளனர். எங்களது இயக்கத்தைச் சேர்ந்த யாருமே காயமடையவில்லை, இறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேக்ஸ் செய்தியை ஒரிசா மாவோயிஸ்ட் பிரிவு அனுப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications