பணி நேரத்தில் கட் அடித்த 3 அரசு டாக்டர்கள் அதிரடி சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil

வேலூர் அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு பணியாற்றி வந்த டாக்டர்கள் தனலட்சுமி, அமர்நாத், ராமச்சந்திரன் ஆகியோர் சமீபத்தில் பணி நேரத்தின்போது பணியைச் செய்யாமல் சென்னைக்குக் கிளம்ப முயன்றனர்.
இதையடுத்து பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் அவர்களைப் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மருத்துவத் துறை இயக்குநர் விநாயகம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் 3 பேரும் தவறு செய்திருப்பது தெரிய வந்த்து.
இதையடுத்து தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டாக்டர்கள் அமர்நாத், ராமச்சந்திரன், தனலெட்சுமி ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கீனம் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications