காவல் நிலையத்தில் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய பெண் ஊராட்சி தலைவர்
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் இருந்த எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய பெண் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 10 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்து உள்ளது திருக்கோஷ்டியூர். இந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தூரப்பாண்டி விசாரணை ஒன்றிற்காக, தமிழரசன் என்பவர் உள்ளிட்ட 10 பேர், திருக்கோஷ்டியூர் போலீஸ் ஸ்டேஷன் வந்துள்ளனர்.
அப்போது போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை நடைபெறும் போதே இரு தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்பு வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில், பெண் ஊராட்சித் தலைவர் மல்லிகா தலைமையில் வந்த கும்பல் எஸ்.ஐ. உள்ளிட்ட போலீசாரை சரமாரியாக அடித்து உதைத்து விட்டு தப்பியோடி விட்டது.
இதனையடுத்து, எஸ்.ஐ. மற்றும் போலீசாரை தாக்கிய பெண் ஊராட்சித் தலைவர் மல்லிகா மற்றும் அவரைச் சேர்ந்த கும்பல் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications