சீட்டுப் பிடித்து ரூ. 10 கோடி மோசடி – கணவன், மனைவி ஓட்டம்
சென்னை: ஏலச் சீட்டு நடத்தி ரூ. 10 கோடி வரை மோசடி செய்ததாக கணவன் மனைவி மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்பட்டள்ளது.
வேளச்சேரி நேரு நகர் ஏ.எல்.முதலியார் தெருவை சேர்ந்தவர் குமாரராஜா (45), இவரது மனைவி பிரகதீஷ்வரி (40). இருவரும் ஷேர் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்துகின்றனர்.
இவர்களிடம் ஏராளமானோர் ரூ. 1 லட்சம் வரை சீட்டுப் பணம் கட்டி வந்தனர். பணத்துக்கு 10 சதவீத வட்டி தருவதாக கூறப்பட்டதால் நிறையப் பேர் சேர்ந்துள்ளனர்.
சீட்டுப் பணம் முடிவடைந்த 20 பேருக்கு குமாரராஜா தம்பதி காசோலை தந்துள்ளது. ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாத்தால் அவை திரும்பி விட்டன. இதையடுத்து குமார ராஜாவை அணுகி கேட்டுள்ளனர் பாதிக்கப்பட்டோர். இதையடுத்து இப்போது தருவதாகவும், அப்போது தருவதாகவும் அலைக்கழித்துள்ளார் குமார ராஜா.
இந்த நிலையில் கணவனும், மனைவியும் தப்பி விட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 500 பேர் இன்று மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தனர்.
கிட்டத்தட்ட ரூ. 10 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தப்பி ஓடி விட்ட கணவன், மனைவியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications