உயர்நீதிமன்ற தாக்குதல்: ஜெ-வைகோ கடும் கண்டனம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று நடந்த அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின்போது முதல்வர், மத்திய சட்ட அமைச்சர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோர் முன்னிலையிலேயே 6 வழக்கறிஞர்களும் 3 பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற பொதுமக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பான காவல் துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாதைக் கண்டித்து, 6 வழக்கறிஞர்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதியை கண்டித்துப் பேசினார்கள் என்பதற்காக அந்த வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
படுகாயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த வன்முறையைப் படம்பிடித்த சில தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்த கேமரா உள்ளிட்ட கருவிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் மிகப் பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் முன்னிலையில் இப்படியொரு தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. எனவே இந்தச் செயலுக்கு காரணமான தமிழக அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாக்குதலை நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர்
ஆகியோருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அவர்களுக்கான மருத்துவச் செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
வைகோவும் கண்டனம்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனநாயக உரிமைகள் திமுகஆட்சியில் நசுக்கப்படுவதற்கு நேற்று உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆளுங்கட்சியினரால் தாக்கப்பட்டது சாட்சியாகும்.
ஜனநாயகத்தில் அநாகரிகத்தை நுழைக்க விடமாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி உபதேசம் செய்துள்ளார். ஈழத் தமிழர்களுக்காக வழக்கறிஞர்கள் தொடர்ந்து அறவழியில் போராடுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக காவல்துறையை ஏவிவிட்டு, வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும் எழுபது வழக்கறிஞர்கள் கையும் காலும் முறிக்கப்பட்டதற்கும் முதல்வர்தான் பொறுப்பாளி ஆவார்.
இந்த வன்முறை வெறியாட்டம் நடத்திய காவல்துறையினர்மீது நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்துத்தான் நேற்று மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மனித உரிமைகள் மைய வழக்கறிஞர்கள் ஜனநாயக உரிமைப்படி கறுப்புத் துணியைக் காட்டி முழக்கம் எழுப்பியுள்ளனர்.
ஆனால், முன்கூட்டியே ஆளும் கட்சி திட்டமிட்டு வழக்கறிஞர்கள் அல்லாதவர்களைக் குவித்து வைத்து, நீதிகேட்ட வழக்கறிஞர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைப் பதிவுசெய்ய முயன்ற லைவ் இந்தியா, என்.டி.டி.வி, இந்து, ஜெயா தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களை குறி வைத்துத் தாக்கியதோடு, கேமராக்களையும் உடைத்து நொறுக்கி உள்ளனர்.
பத்திரிகைத் துறையை தொலைக்காட்சித் துறையை மிரட்டுவதற்காகவே இந்தத் தாக்குதலை ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு நடத்தி உள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர்கள் மீதே காவல்துறை வழக்கும் பதிவு செய்து உள்ளது.
காவல்துறையும் ஆளுங்கட்சியினரும் மாநகராட்சித் தேர்தலில் நடத்திய வன்முறை வெறியாட்டம் மேலும் மேலும் தொடர்ந்து முதல்வரின் அனுக்கிரகத்தோடு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கண் முன்னாலேயே நடத்திக் காட்டப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பில்லை. ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. இந்நிலையில் கருணாநிதி ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்.
இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்கறிஞர்களைத் தாக்கிய ஆளுங்கட்சி ரவடிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஏற்கனவே கேள்விக்குறியாகிவிட்ட காவல்துறையின் நம்பகத்தன்மை அடியோடு நொறுங்கிப் போகும் என எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications