கேரள சிறுமியின் வாயிலிருந்து தொடர்ந்து வரும் புழுக்கள்
திருப்பூர்: கேரளாவைச் சேர்ந்த ஜோதிமணி –பிந்து தம்பதியின் 5 வயதுமகள் காயத்ரியின் வாயிலிருந்து தொடர்ந்து புழுக்கள் வெளியாவதால் அந்த சிறுமி பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறாள்.
ஜோதிமணி பிந்து தம்பதிக்கு காயத்ரி தவிர ராஜா என்ற மகன் உள்ளார். கோழிக்கோட்டில் வசித்து வருகிறார்கள்.
ஜோதிமணி திருப்பூர் காலேஜ் ரோடு அணைப் பாளையம் புளியந்தோட்டத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்து இருந்தார்.
அங்கு அவரது மகள் காயத்ரி வயிற்று வலியால் துடித்தாள். சாப்பாடு கொடுத்தால் வாந்தி வந்தது. அப்போது சுமார் 12 செ.மீ. முதல் 25 செ.மீ வரை உள்ள புழுக்கள் வெளியே வந்தது. தொடர்ந்து இவ்வாறு வந்து கொண்டிருந்தது. மலம் கழிக்கும் போதும் சிறுமி காயத்ரி மிகவும் அவதிப்பட்டாள்.
அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருந்து மூலம் மலம் வழியாக புழுக்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில்,
குடிசை பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகள் ரோட்டில் விளையாடும். பின்னர் கை, கால்களை சுத்தம் செய்யாமல் வீட்டுக்கு வரும். தாய்மார்கள் அக்குழந்தைக்கு சோறு ஊட்டுவார்கள். வீட்டில் சுத்தம் இல்லாத இடத்தில் சோறு கீழே விழும் அதனையும் சேர்த்து ஊட்டி விடுவார்கள்.
அதனால் தான் இது போன்ற புழுக்கள் உருவாகிறது. இதற்கு அல்காயிஸ்லம்ரி காய்ட்ஸ் என்று பெயர். சிறுமியின் உடலில் இருந்து 40 புழுக்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புழுக்கள் எல்லோருக்கும் ஏற்படும். குழந்தைகளுக்கு தான் அதிக அளவு பாதிப்பு இருக்கும்.
இந்த புழுக்கள் 35 செ.மீ. வரை வளர கூடியது. மண் புழு போல் உடலில் எல்லா பாகங்களுக்கும் செல்லும். இந்த சிறுமிக்கு தொண்டைக்குழிக்குள் வந்து விட்டதால் வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்த புழுக்கள் ரத்தத்தை குடிக்க கூடியது.
தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் ரத்தத்தை குடித்து ரத்த சோகையை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மை உடையது. முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் தன்மை உடையது.
எனவே குழந்தைகளை சுத்தமாக இருக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications