திருவாரூர் அருகே நடந்த சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 8 பேர் பலி
திருவாரூர் : திருவாரூர் அருகே காரும், லாரியும் மோதிக் கொண்டதில் கேரளாவைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எர்ணாகுளம் கானூர் பகுதியைச் சேர்ந்தவர் குரியன் (75). உறவினர் குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு காரில் புறப்பட்டார். நேற்று காலை 5.30 மணிக்கு திருவாரூர் நோக்கி கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராதவிதமாக திருவாரூர் அம்மையப்பன் அருகே தென்கரை என்ற இடம் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜல்லி லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
இதில காரில் பயணம் செய்த மேத்யூஸ் (35), லைலா (35) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மேலும், காரில் பயணம் செய்த குரியன், அவரது மனைவி தங்கம்மாள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடனே சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் உடனே தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு தங்கம்மாள் (55) மற்றும் ஜான் ஜோசப் (12) சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். மேலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெக்டர் (27), லைமி (ஒன்றரை), லைமி ஜோசப் (35), ஜோனா ஜோசப் (10) ஆகிய 4 பேரும் சிகிச்சை பலன் இன்றி ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications