அரசின் பாதுகாப்பில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை - கருணாநிதி
டெல்லி: பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதி, அரசின் அரவணைப்பில் அந்த அம்மையார் நாங்கள் குறிப்பிடுகிற மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் நாங்கள் கூறியிருக்கின்ற நிபந்தனை. இது ஒன்றும் கடுமையானது அல்ல என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
டெல்லி சென்றிருந்த முதல்வர் கருணாநிதி நேற்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். பின்னர் திட்டக் கமிஷன் கூட்டத்தில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
கேள்வி: பிரதமரிடம் முக்கியமாக எதைப் பற்றி பேசினீர்கள்?
பதில்: சேலம் இரும்பு தொழிற்சாலை தொடங்க இடம் கொடுத்தவர்கள் வேலைவாய்ப்பு கோரி கொடுத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவ்வாறு இடம் தந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு உரிமைகளை அளிக்க வேண்டும் என்ற உத்தரவாதம் ஏற்கனவே அளிக்கப்பட்டிருப்பதை நிறைவேற்றிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளேன்,
கேள்வி: அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினை குறித்து இன்று பிரதமருடன் பேசினீர்களா?
பதில்: அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினை பற்றி இன்றையதினம் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்திலே பேசியிருக்கிறேன். பிரதமர், திட்டக்குழுவின் தலைவர் என்ற காரணத்தால் அவருக்கு தனிப்பட்ட முறையில் இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
கேள்வி: திட்டக்குழுவிலே பேசும்போது, மருத்துவ வசதி திட்டத்திற்காகவும், குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டத்திற்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கப்பட்டதா?
பதில்: எல்லா திட்டங்களையும் நாங்கள் தொகுத்து அளித்திருக்கிறோம். அதையெல்லாம் மனதிலே கொண்டுதான் ஆண்டு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: பிரபாகரனின் தாயாருக்கு தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பது பற்றி தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை படித்துள்ளார். அப்போது சில நிபந்தனைகளோடு என்று சொல்லியிருக்கிறார். என்ன நிபந்தனைகள்?
பதில்: பெரிய நிபந்தனைகள் ஒன்றும் இல்லை. அவர்களின் பாதுகாப்பு கருதி, அரசின் மேற்பார்வையிலே அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதைத்தான் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்து, அரசின் சார்பில் அதற்கு பதில் அளிக்கப்பட்டு, தீர்ப்பு வந்ததின் தொடர்ச்சியாக அந்த அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.
அவருடைய பாதுகாப்பு கருதி, அரசின் அரவணைப்பில் அந்த அம்மையார் நாங்கள் குறிப்பிடுகிற மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் நாங்கள் கூறியிருக்கின்ற நிபந்தனை. இது ஒன்றும் கடுமையானது அல்ல.
கேள்வி: இலங்கையில் போர் முடிந்த பிறகு அதிகார பங்களிப்பு செய்யப்படும் என்று உறுதியளித்தார்கள். ஆனால் போர் முடிந்த பிறகு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வில்லையே? வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையே?
பதில்: அது பற்றி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
கேள்வி: இதற்காக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?
பதில்: நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். தனியாக வலியுறுத்த முடியாது. மத்திய அரசு மூலமாகத்தான் வலியுறுத்துவோம்.
கேள்வி: ஸ்பெக்டரம் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறதே?
பதில்: ஆ.ராசா ஒரு "தலித்'' ஆக இருக்கின்ற காரணத்தால் ஆதிக்க சக்திகள் சில இந்த அவதூறை பரப்பிக்கொண்டிருக்கின்றன.
கேள்வி: கோவையில் நடைபெற உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை முன்னிட்டு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன?
பதில்: கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மேம்பாட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாகவும், சிறப்பாகவும் கோவை மாநகராட்சியின் மூலமாக பல சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கோவை நகரை இணைக்கின்ற பல்வேறு சாலை போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கேள்வி: செம்மொழி மாநாட்டிற்கு பிரதமரோ, சோனியா காந்தியோ வருகிறார்களா?
பதில்: நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது, அவர்கள் அந்த மாநாட்டிலே கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. செம்மொழி மாநாட்டினைத் தொடங்கி வைக்க நாங்கள் ஏற்கனவே ஜனாதிபதியை கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் வர ஒப்புக்கொண்டிருக்கிறார். அண்மையில்தான் பிரமாண்டமாக நடைபெற்ற தமிழக சட்டமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் வந்திருந்தனர். அதனால்தான் அவர்களை மீண்டும் சிரமப்படுத்த விரும்பவில்லை.
கேள்வி: வருங்காலத்தில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையுமா?
பதில்: தெரியாது.
கேள்வி: பா.ம.க.வுடன் கூட்டு சேர்ந்து, டாக்டர் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு கொடுப்பது பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவரோடு கலந்து ஆலோசித்தீர்களா?
பதில்: ஆலோசிக்கவில்லை
சென்னை திரும்பினார்
தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை முதல்வர் கருணாநிதி சென்னை திரும்பினார்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications