'வீராசாமி முதலாளி; நான் கடைக்கார பையன்'-துரைமுருகன்
சென்னை: மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், சட்டசபையில் மின்துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக கொள்கை விளக்கக் குறிப்புகளை சட்ட அமைச்சர் துரைமுருகன் தான் தாக்கல் செய்தார்.
மேலும் மின்துறை தொடர்பாக நடந்த விவாதங்களுக்கும் துல்லியமான புள்ளி விவரங்களுடன் பதில் தந்து எம்எல்ஏக்களை அசரடித்தார்.
துரைமுருகன் பேசுகையில், ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக் குறைவு காரணமாக நான் பதில் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த துறையில் மிகுந்த அனுபவம் மிக்கவர். இந்த இலாகாவைப் பொருத்தளவில் அவர் பெருங்கடல். எனக்கு சம்பந்தம் இல்லாததால் அவர் அளவு பதில் சொல்ல முடியாது.
ஆற்காடு வீராசாமி கடை முதலாளி. நான் கடைக்கார பையன் மாதிரி. கொஞ்ச நேரம் இந்த கடையை பார்த்துக் கொள் என்றதால் பார்த்திருக்கிறேன். இனி நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்தால் சொல்கிறேன். இல்லை என்றால் அவர் வந்ததும், அவரிடம் தந்து விடுகிறேன் என்றார்.
அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி, கடையை கொஞ்ச நேரம் பார்க்க சொன்னாலும் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications