தென் கொரிய போர் கப்பலை மூழ்கடிதது வட கொரிய நீர்மூழ்கி?

கம்யூனிஸ்ட் நாடான வட கொரியாவுக்கும் அமெரிக்க ஆதரவு நாடான தென் கொரியாவுக்கும் இடையே 1953ம் ஆண்ட போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனாலும் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
வட கொரியாவுக்கு சீனா மறைமுகமாக உதவிகளை செய்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா நேரடியாக உதவி வருகிறது. தென் கொரியாவில் ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள் நிலை கொண்டுள்ளன.
இரு நாட்டுப் படைகளும் எல்லைப் பகுதியில் அவ்வப்போது மோதிக் கொள்வதும், போட்டி போட்டு ஏவுகணை சோதனைகளை நடத்துவதுமாக உள்ளன. ஈரான், பாகிஸ்தானின் உதவியோடு வட கொரியா அணு ஆயுதத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.
இந் நிலையில் தான் கடந்த மார்ச் மாதத்தில் தென் கொரிய போர்க் கப்பல் மர்மமான முறையில் சிதறடிக்கப்பட்டு மூழ்கியது. இதில் 46 வீரர்கள் பலியாயினர். கப்பலில் ஏதாவது வெடிவிபத்து நடந்து மூழ்கியதா அல்லது வட கொரியாவின் நீர்மூழ்கியுடன் தவறுதலாக மோதி சிதறியதா என்ற விசாரணை நடந்தது.
இந் நிலையில் இந்தக் கப்பலை ஒரு நீ்ர்மூழ்கி ஏவுகணை தான் சிதறடித்ததாக இப்போது ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஏவுகணையை வட கொரிய நீர்மூழ்கிக் கப்பல் தான் செலுத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் இரு நாடுகளிடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications