முற்படுத்தப்பட்ட மக்களுக்கு நலவாரியம்-எஸ்.வி.சேகர் கோரிக்கை
சென்னை: திமுகவில் தொண்டனாக இணையும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக எஸ்.வி. சேகர் எம்எல்ஏ கூறியுள்ளார்.
சட்டசபையில் நடைபெற்ற சமூக நலம், சத்துணவு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எந்தக் கட்சியையும் சாராத உறுப்பினரான சேகர் பேசியது:
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்று உணர்த்தியவர்களுக்கு நன்றி. இனி துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன். திமுகவில் தொண்டனாக இணையும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
கோயில் நிலம் என்பது புறம்போக்கு நிலம் அல்ல. எனவே, கோயில் நிலத்தை யாருக்கும் இலவசமாக பட்டா வழங்கக் கூடாது. இது ஆன்மிக அன்பர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு சந்தை மதிப்பில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளில் சிவன் சொத்து குலநாசம் போன்ற வாசகங்களை எழுதி வைக்க வேண்டும். 4 லட்சம் புரோகிதர்களுக்காக புரோகிதர் நலவாரியம் அமைக்க வேண்டும். தட்டில் விழும் காசுகளை மட்டும் நம்பியிருக்கும் அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.
ரயிலில் வயது முதிர்ந்த ஆண்களுக்கு 30 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணச் சலுகை வழங்கப்படுவதுபோல தமிழக அரசு பஸ்களிலும் கட்டணச் சலுகை வழங்க வேண்டும். 1,500 பேர் அமரும் வகையில் ரூ. 50 கோடியில் கலைவாணர் அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு அருகில் கலைஞர் பெயரில் நாடக அரங்கம் அமைக்க வேண்டும்.
முற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக இதர பிரிவினர் நலவாரியம் அமைக்க வேண்டும் என்றார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications