பிளஸ்டூ: 17ம் தேதி முதல் மறு கூட்டல், துணைத் தேர்வுக்கான விண்ணப்பம்
சென்னை: பிளஸ்டூ தேர்வில் மறுகூட்டல் மற்றும் தவறிய பாடங்களுக்கு உடனடி துணைத் தேர்வு எழுத விரும்புவோருக்காக மே 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு எழுதி 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் பெயிலானவர்கள் வரும் ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் நடைபெறும் மேல்நிலைப்பள்ளி சிறப்புத் துணைத் தேர்வை எழுதலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை வழங்கப்படும். 2010 மார்ச் மாதம் பள்ளிக்கூட மாணவர்களாக தேர்வு எழுதியவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்திலேயே எஸ்.எச். வகை விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, அங்கேயே 21ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்கவேண்டும். கட்டணத்தை பள்ளியில் பணமாக செலுத்தவேண்டும்.
ஒரு பாடத்திற்கு தேர்வுக்கட்டணம் ரூ.85, 2 பாடங்களுக்கு ரூ.135, 3 பாடங்களுக்கு ரூ.185.
கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதி பெயிலான தனித்தேர்வர்களும், 2010-க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்களும் இந்த உடனடித்தேர்வை எழுதலாம்.
விண்ணப்ப படிவங்களை அரசுத்தேர்வு இயக்குனர் அலுவலகம், மண்டல அரசுத்தேர்வு துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசு தேர்வு துணை மண்டல அலுலவகங்களில் 28ம் தேதிக்குள் சேரும் வகையில் நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
மதிப்பெண் சான்றிதழ் நகல், அல்லது இணையதளத்தில் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகலை இணைக்கவேண்டும்.
உடனடி தேர்வு ஜுன் மாதம் 29ம் தேதி முதல் ஜுலை 9ம் தேதி வரை நடைபெறும்.
மறு கூட்டல்:
இதேபோல, பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும் மறு கூட்டலுக்கும் விண்ணப்பம் 17ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வை 7 லட்சத்து 43 ஆயிரத்து 822 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட உள்ளது. அட்டவணைப்படுத்தப்பட்ட மார்க் பட்டியல் இன்று காலை 10 மணிக்கே அவர்கள் படித்த பள்ளியில் ஒட்டப்படும்.
மதிப்பெண் சான்றிதழ்கள் 26ம் தேதி பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
விடைத்தாள் அச்சுப்பகர்ப்பு நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் கொடுக்கப்பட உள்ளன.
படிவங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகம், மற்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசுத்தேர்வு துணை மண்டல இயக்குனர்கள் அலுவலகங்கள் ஆகியவற்றில் கிடைக்கும்.
விடைத்தாள் அச்சுப்பகர்ப்பு நகல்பெற மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொன்றுக்கும் ரூ.550. இதரப்பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275.
மறு கூட்டல் அனைத்துப் பாடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மறுகூட்டல் கோரி தற்போது விண்ணப்பிக்க தேவை இல்லை. விடைத்தாள்நகல் பெற்ற பிறகு விரும்பினால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மறு கூட்டலுக்கு முதல் மொழிப்பாடம், ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.305, இதரப்பாடங்களுக்கு ரூ.205 ஆகும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தொகையினை தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் அரசு தேர்வு இயக்குனர், சென்னை-6 என்ற பெயரில் வங்கி வரைவோலையை நேரில் ஒப்படைத்து விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பம் கொடுக்கும் அலுவலகங்களில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
விடைத்தாள் நகல்:
விடைத்தாள் அச்சுப்பகர்ப்பு நகல் பெற்றவர்கள்தான் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விரும்பினால் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்ற 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதன்மை மொழி மற்றும் ஆங்கிலமொழி பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.1010 மற்ற பாடங்களுக்கு தலா ரூ.505 கட்டணம் ஆகும்.
மறு கூட்டலுக்கு கட்டணம் முதன்மை மொழி, ஆங்கிலம், உயிரியல் பாடத்திற்கு தலா ரூ.305 இதரப்பாடங்களுக்கு ரூ.205 ஆகும்.
இதற்கான அறிவுரைகள் விடைத்தாள் அச்சுப்பகர்ப்பு நகலுடன் இணைத்து அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளைக் காண
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications