யூரோ மதிப்பு பெரும் சரிவு... இந்திய ஐடி துறை பாதிப்பு!

அமெரிக்காவின் லேஹ்மன் பிரதர்ஸ் வங்கியின் சரிவுக்குப் பிறகு யூரோ மதிப்பு பெருமளவு சரிந்தது. ஆனால் அதேநேரம் டாலரின் மதிப்பில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அதன் மதிப்பு கிட்டத்தட்ட நிலையாகவே இருந்தது.
ரூபாய்க்கு நிகரான யூரோ மதிப்பும் கூட நிலைப்படுத்தப்படவில்லை. நான்கு ஆண்டுகளாக இந்த நிலைதான் நீடிக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை டாலருக்கு அடுத்து முக்கிய சந்தை மதிப்பாகத் திகழ்வது யூரோதான். 15 பில்லியன் டாலர் அளவுக்கான ஏற்றுமதிகள் யூரோ மூலமே நடக்கின்றன.
மகிந்திரா சத்யம், டயிள்யூஎன்எஸ் குளோபல் சர்வீஸஸ், மாஸ்டெக் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவைவிட அதிகமாக ஐரோப்பிய நாடுகளில்தான் வர்த்தகம் செய்கின்றன.
மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போஸிஸ் மற்றும் விப்ரோ போன்றவற்றின் 25 சதவிதம் வரை யூரோக்களாகவும் பவுண்டுகளாகவும்தான் கிடைக்கின்றன.
இந்த நிலையில், கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து யூரோ மதிப்பு மேலும் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி 1.22 டாலராக யூரோ மதிப்பு சரிந்துவிட்டது. 1.24- டாலருக்குக் கீழே யூரோ மதிப்பு கீழே சரியாது என்று அனைவருமே நம்பிக்கொண்டிருந்த நிலையில், இந்த திடீர் சரிவு, பல முனை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாதிப்பின் அளவு குறித்து கருத்து தெரிவிக்க பல நிறுவனங்கள் முன்வரவில்லை. ஆனால் மாற்று நடவடிக்கைகளை சில நிறுவனங்கள் யோசிக்க ஆரம்பித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
எச்.சி.எல் நிறுவனம் தனது வருவாயில் 29 சதவிகிதம் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், டெக் மஹிந்திரா நிறுவனம் 59 சதவிகித வருவாயை பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெற்ற வந்தது. இப்போது யூரோவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் இந்த நிறுவனங்களின் வருவாயில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான் என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.
டி.சி.எஸ் மற்றும் விப்ரோவின் வருவாயும் யூரோ வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications