பிஎஸ்என்எல் 3ஜி செல்போனில் இனி டி.வி-சினிமா பார்க்கலாம்!
சென்னை: 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதியில் தான் வீடியோ செல்போன் சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது 3ஜி செல்போன் சேவையை முன்பே அறிமுகப்படுத்திவிட்டது.
இப்போது 'பிஎஸ்என்எல் லைவ் போர்டல்' என்ற 3ஜி சேவை மூலம் செல்போனில் தமிழ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மொழிகளில் டி.வி. சேனல்களை பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று சென்னையில் இந்த சேவையை துவக்கி வைத்த பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கோயல் நிருபர்களிடம் கூறுகையில்,
பிஎஸ்என்எல் நிறுவனம்தான் நாட்டிலேயே முதல் முறையாக 3ஜி சேவையை வழங்கியுள்ளது. இப்போது 480 நகரங்களில் 3ஜி சேவை வழங்கப்படுகிறது. அடுத்த 6 மாதங்களில் 650 நகரங்களுக்கு இந்தச் சேவை விரிவுப்படுத்தப்படும்.
இந்த 'பிஎஸ்என்எல் லைவ் போர்டல்' என்ற 3ஜி சேவை மூலம் செல்போனில் தமிழ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மொழிகளில் டி.வி. சேனல்களை பார்க்கலாம். செய்தி, இசை, பொழுதுபோக்கு, குழந்தைகளுக்கான சேனல், மண்டல சேனல்களை பார்க்கலாம்.
மேலும் திரைப்படத்தையும் பார்க்க முடியும். இதற்கு ரூ.40 கட்டணமாகச் செலுத்த வேண்டும். விரும்பிய வீடியோக் காட்சிகளை ரூ.5 முதல் ரூ.20 கட்டணமாகச் செலுத்திப் பார்க்கலாம். புதிய சினிமா பாடல்களை ரூ.15 செலுத்தி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் பல கம்ப்யூட்டர் விளையாட்டுகளையும் டவுன்லோட் செய்லாம். ஒவ்வொரு விளையாட்டுக்கும் தகுந்தாற்போல ரூ.35 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
தென் மாநிலங்களில் 72 நகரங்களில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. இது மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் 3ஜி சேவை பெற்றுள்ளனர்.
3ஜி சேவையைக் கிராமப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இனி 3ஜி சேவை மூலம் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் தொடர்பான சந்தேகங்களையும், முதலுதவிகளையும் செல்போன் மூலமே பெற முடியும். கல்வித் துறை தொடர்பான விளக்கங்களை, வகுப்புகளை ஆன்லைன் மூலம் செல்போன் மூலம் பெற முடியும்.
1995ல் தான் செல்போன் சேவை பயன்பாட்டுக்கு வந்தது. பிஎஸ்என்எல் நிறுவனம் 7 ஆண்டுகளுக்குப் பிறகுதான் செல்போன் சேவையில் கால்பதித்தது. இப்போது பிஎஸ்என்எல்க்கு 10 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
பிஎஸ்என்எல், ஏர்டெல் உள்ளிட்ட ஒட்டுமொத்த செல்போன் நிறுவனங்களின் வருவாய் ரூ. 1,50,000 கோடி. இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் பங்கு 20 சதவீதம். எனவே வருவாயைப் பொருத்தவரையில் பிஎஸ்என்எல் நிறுவனம் 2வது இடத்தில் உள்ளது.
கண்ணாடி இழை கேபிள் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கப்படும்போது 100 எம்.பி. முதல் 1,000 MB வரை தரமான சேவை கிடைக்கும்.
29,000 கிராமங்களில் பிஎஸ்என்எல் இணைப்பகங்கள் உள்ளன. இங்கு வயர்லெஸ் இணையதள சேவையும், அதிவேக இண்டர்நெட் சேவையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 2.40 லட்சம் கிராமங்களில் வை-மேக்ஸ் என்ற அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கப்படும். அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும்.
கடந்த ஆண்டில் ரூ. 35,800 கோடி வருவாய் இருந்தது. இதில் ரூ.10 ஆயிரம் கோடி செல்போன் சேவை மூலம் பெறப்பட்டது. இந்த முறையும் அதே வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications