கன மழைக்கு மத்தியில் ரமணன் மகள் கல்யாணம்!
சென்னை: தமிழகத்தில் மழை வரும்போதெல்லாம் மக்களால் அதிகம் கவனிக்கப்படும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணனின் மகள் திருமணம் கன மழைக்கு மத்தியில் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
வழக்கமாக தமிழகத்தில் மழை வரும்போதும், புயல் வரும்போதும், வெயில் காலத்திலும், மக்களால் அதிகம் கவனிக்கப்படும் ஒரேநபர் ரமணன்தான். அவரது வானிலை அறிக்கை வாசிப்பு மக்களிடையே வெகு பிரபலம். மழை குறித்த நிலவரத்தை தனக்கே உரிய பாணியில் சொல்லி அசத்துவார்
ஆனால் லைலா புயலால் சென்னை நகரம் மழையால் வெளுத்து வாங்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்,2 நாட்களாக ரமணன் சத்தத்தையே காணோம். விசாரித்தபோது அவரது மகள் திருமணம்.எனவே ரமணன் 2 நாள் லீவு என்று தெரிய வந்தது.
அனேகமாக ரமணன் மிஸ் செய்த முதல் புயல் இதுவாகத்தான் இருக்கும். இருந்தாலும் புயலின் பாதிப்பை ரமணன் இல்லத்தாரும் அனுபவித்தனர். மழையால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் பெரும்பாடு பட்டுவிட்டனராம்.
திருமணத்திற்கு வந்தவர்கள், ரமணன் புயலையும் திருமணத்திற்கு அழைத்து வந்து விட்டாரா என்று சிரித்தபடி கேட்டனராம்.
ரமணன், புயல் செய்தியை வாசிக்காவிட்டாலும் கூட புயலும், மழையும் அவரைத் தேடிப் போய் விட்டது சுவாரஸ்யமானதுதான்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications