சிங்கப்பூரில் தொடர் கத்திக்குத்து சம்பவங்கள்-சென்னை தொழிலாளி படுகொலை

சிங்கப்பூரின் கல்லாங் ரயில் நிலைய சப்-வே அருகே கடந்த சில தினங்களாக அடையாளம் தெரியாத கும்பல் பலரையும் கத்தியால் குத்தி தாக்கி வருகிறது. இதுவரை 4 பேர் கத்திக்குத்துக்கு ஆளாகியுள்ளனர். அதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பலியானவர் சென்னையைச் சேர்ந்த 41 வயதான சண்முகநாதன் டெல்லிதுரை ஆவார். கட்டடத் தொழிலாளியான இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். இவர் கல்லாங் அருகே கத்திக் குத்துக் காயங்களுடன் கொலையாகிக் கிடந்தார்.
அதே போல சந்தீவ் சிங் (24) என்ற வாலிபரும், 44 வயதான இன்னொரு இந்தியரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்துக் குத்துக்கு ஆளாயினர்.
மேலும் ஆங் ஜுன் ஹெங் (19) என்ற சீன வாலிபருக்கும் பயங்கர கத்திக் குத்து விழுந்தது. இதில் அவரது இடது கை விரல்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அவரிடமிருந்து செல்போனும், பர்சும் திருடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களை நடத்தும் கும்பல் குறித்து இதுவரை அடையாளம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications