சுதர்சனம் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்தாரா தங்கபாலு?- காங். மேலிடம் பேரதிர்ச்சி
டெல்லி: ராஜ்யசபா சீட்டைப் பிடிப்பதற்காக காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் சரமாரியாக முயன்று தோல்வியுற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சமர்ப்பித்த ஒரு கடிதம் காங்கிரஸ் மேலிடத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய அளவுக்கு மிகப் பிரசித்தி பெற்றது, உலகப் புகழ் பெற்றது காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல். ஒரு சீட் என்றாலும் சரி, 100 சீட் என்றாலும் சரி, அதைப் பிடிக்க அங்கு குடுமிபிடி சண்டையே நடைபெறும். அந்த அளவுக்கு கோஷ்டிகளின் எண்ணிக்கை அதிகம்.
இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட்டை ஒதுக்கியது திமுக. இந்த சீட்டைப் பிடிக்க சட்டையைக் கிழித்துக் கொண்டு நாறாத குறையாக பெரும் மோதல் ஏற்பட்டு முடிந்துள்ளதாம்.
இந்த சீட்டைப் பிடிக்க தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியும் பல்வேறு வழிகளில் டெல்லியில் முயன்று பார்த்து மோதித் தோற்றுள்ளன. இறுதியில் சீட் கிடைத்தது சுதர்சன நாச்சியப்பனுக்கே.
ஒரு சீட்டுக்காக ஜி.கே.வாசன், தங்கபாலு, இளங்கோவன் என தமிழக காங்கிரஸ் கட்சியின் அனைத்துக் கோஷ்டித் தலைவர்களும் அடித்துக் கொண்டதைப் பார்த்து காங்கிரஸ் மேலிடம் கடும் கோபமடைந்துள்ளது. அதை விட அதிர்ச்சி தரும் விஷயமாக மாநிலத் தலைவர் தங்கபாலு கொடுத்த கடிதம் ஒன்று காங்கிரஸ் மேலிடத்தை குழப்பியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவரான தங்கபாலு, தன்னை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் 37 பேர் ஆதரிப்பதாக கூறி மேலிடத்தில் ஒரு கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தில் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் கையெழுத்தும் இருந்தது. சுதர்சனம் வாசனின் ஆதரவாளராக கருதப்படுபவர். அப்படியிருக்க தங்கபாலு எப்படி சுதர்சனத்தின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை பெற முடிந்தது என்ற சந்தேகம் மேலிடத்திற்கு வந்துள்ளது.
இந்த கடிதத்தை மற்றொரு கோஷ்டி தலைவரும் ராஜ்யசபா சீட் பிடிக்க முயல்பவருமான இளங்கோவனிடம் காட்டி சந்தேகம் கேட்டது. இதை பார்த்த இளங்கோவன் அதிர்ச்சியாகி, "அப்படியெல்லாம் இருக்காதே' என்று கூறி, வாசனின் ஆதரவாளராக கருதப்படும் சுதர்சனத்தின் கையெழுத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தை தங்கபாலுவால் எப்படி பெற முடிந்தது என்று சந்தேகம் கிளம்பவே, விஷயத்தை வாசனின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
வாசன் ஆச்சரியம் அடைந்து, உடனடியாக அகமது படேல் உள்ளிட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு, "அந்த கடிதத்தை ஏற்க வேண்டாம் என்றும், அதுபோன்று தமிழக எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை' என்றும் கூறிவிட்டார்.
கார்வேந்தனையும் தொடர்பு கொண்டு இளங்கோவன் தெரிவிக்கவே அவரும் அதிர்ச்சியடைந்தார். அதுபோன்ற கடிதம் அளித்தாரா என்பது குறித்து சுதர்சனத்தை கார்வேந்தன் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடிதம் கொடுத்ததாக நினைவு இல்லை என்ற ரீதியில் பதில் தந்தார்.
உண்மையில் தங்கபாலுவுக்கு சுதர்சனம் கடிதம் கொடுத்தாரா இல்லையா என்பது வாசன் தரப்புக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கபாலுவுக்கு சிபாரிசு செய்து சுதர்சனம் கடிதம் கொடுத்தாரா என்ற குழப்பம் காங்கிரஸ் மேலிடத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறாம்.
அப்படி இல்லாவிட்டால் சுதர்சனத்தின் பெயரை தங்கபாலு தவறாக பயன்படுத்தினாரா என்ற சந்தேகமும் எழுந்து காங்கிரஸ் மேலிடத்தை அதிர வைத்துள்ளதாம்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications