ஐபிஎல் அணிகளில் வெளிநாட்டு முதலீடு கண்டுபிடிப்பு - நேரடி வரிகள் வாரியம் விசாரிக்கிறது
டெல்லி: பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளில் வெளிநாட்டினர் முதலீடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வெளிநாட்டு வரி பிரிவு விசாரணை நடத்தவுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் முறைகேடாக பணம் முதலீடு செய்யப்பட்டு இருப்பது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக சண்டிகர், கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 8 விசாரணை குழுக்களை வருமான வரித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அணிகளின் ஏலம், வீரர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகள், வரி செலுத்திய விவரங்கள் உள்ளிட்ட பண பரிவர்த்தனைகளை அந்த குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் இந்த விசாரணை நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். நிர்வாக அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில், பல்வேறு ஐ.பி.எல். அணிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் முதலீடு செய்துள்ள முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. ஆனால், ஒட்டு மொத்த பணபரிமாற்ற தகவல்களும் வருமான வரித் துறையினரிடம் சிக்கவில்லை. குறிப்பாக பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளில் வெளிநாட்டினர் முதலீடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வெளிநாட்டு வரி பிரிவுக்கு மும்பையில் விசாரணை நடத்தும் வருமானவரி குழுவினர் கடிதம் எழுதியுள்ளனர். சுவிட்சர்லாந்து மற்றும் வரி ஏய்ப்போருக்கு சொர்க்க பூமியாக திகழும் சில வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முதலீடுகள் குறித்து கண்காணிக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications