குமரன் பத்மநாபனுக்கு பொது மன்னிப்பு.... அரசுப் பதவி!!-இலங்கை சூசகம்

புலிகளின் வெளியுலகத் தொடர்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்தவர் கேபி. தேசியத் தலைவர் என தமிழர் கொண்டாடும் பிரபாகரனால் அந்தப் பொறுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டவர்.
ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் கொடுத்து தமிழரின் நம்பிக்கையைத் தகர்த்தார். புலிகளின் தலைவர் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார்.
சிறிது தினங்கள் கழிந்த நிலையில், மலேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். அதன்பிறகு அவரைப் பற்றி வெளிப்படையான செய்திகள் எதுவும் இல்லை என்றாலும், அவர் அரசாங்க சாட்சியாக மாறி, புலிகளின் சொத்துக்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று கூறப்பட்டது.
ராஜபக்சே சகோதரர்கள் தேர்தலைச் சந்தித்ததே கேபியால் காட்டிக் கொடுக்கப்பட்ட புலிகளின் நிதி ஆதாரங்களை வைத்துதான் என்று கூறப்பட்டது.
ராஜபக்சே சகோதரர்களுடன் இணக்கமாகப் போய்விட்டதால் கேபிக்கு ராணுவ முகாமில் ராஜ உபசாரம் நடப்பதாகவும், கோத்தபாய போன்றவர்களுடன் அவர் இணக்கமான உறவில் இருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த நிலையில் கேபிக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அரசுத் தரப்பிலிருந்தே செய்திகள் கசியத் துவங்கியுள்ளன.
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஊடகத் துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவும் இதுபற்றி சூசகமான தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "குமரன் பத்மநாதன் ஒரு காலத்தில் அரசன் போல வாழ்ந்து வந்தவர். எனினும் தற்போது அவர் தமது பெருமைகள் அனைத்தையும் இழந்து சாதாரணமாக வாழ்ந்து வருகிறார்.
அவருக்கு இப்போது பொதுமன்னிப்பு வழங்கும் யோசனையில் அரசு உள்ளது. அதற்கான சாத்தியங்களும் அதிகம் உள்ளதை மறுப்பதற்கில்லை.
ஆனால் அவருக்கு அரசாங்க பதவி எதுவும் வழங்கப்படுமா என்பதை அரசாங்கத்தின் உயர் மட்டம்தான் தீர்மானிக்கும்..." என்றார்.
'இயக்கத்துக்கு எதிராக செயல்பட்டவர் கேபி'
கேபிக்கு தண்டனை எதுவும் கிடையாதா? என்று இந்த பேட்டியின் போது கேஹலியவிசம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "தமது இயக்கத்துக்கு எதிராக செயற்பட்டதாலேயே கேபி இப்போது தண்டனையை அனுபவித்து வருகிறார். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளின் பல்வேறு தரப்புக்களையும் அரசாங்கத்தினால் முடக்கமுடிந்தது. எனவே அவருக்கு தண்டனை தேவையில்லை என்றே அரசு கருதுகிறது" என்றார் கேஹலிய ரம்புக்வெல.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications