ஆயுதக் கொள்முதல் ஊழல்: பொன்சேகாவுக்கு கோர்ட் உத்தரவு
கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சரத் பொன்சேகா வரும் ஜூன் 23ல் நேரில் ஆஜராக வேண்டும் என கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பொன்சேகா உள்ளார்.கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரில், ஆயுதங்கள் சப்ளை செய்யும் உரிமையை ஹிகார்ப் நிறுவனத்துக்கு அப்போது ராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகா அளித்ததுள்ளார்.
இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஹிகார்ப் நிறுவனத்தின் தலைவரும், பொன்சேகாவின் மருமகனுமான தனுனா திலகரத்னேவை கைது செய்ய கடந்த பிப்ரவரியில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வரும் ஜூன் 23ம் தேதி கொழும்பு நீதிமன்றத்தில் பொன்சேகா ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் பொன்சேகா சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கென்யா தலைநகர் நைரோபியில் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள காமன்வெல்த் ஐக்கிய நாடாளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ள, பொன்சேகாவுக்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெஹெலியா ரம்புகவெல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாநாட்டில் கலந்துகொள்ள பொன்சேகாவுக்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெளிநாடு செல்லவேண்டுமெனில், நீதிமன்றத்தின் ஒப்புதலை அவர் பெற வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications