63 கிலோ கேட்டமைனுடன் பாங்காக் விமான நிலையத்தில் 2 இந்தியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
பாங்காக்: போதைப் பொருளான கேட்டமைனுடன் பாங்காக் விமான நிலையம் வந்திறங்கிய இரண்டு மேற்கு வங்காள மாநில வாலிபர்களை பாங்காக் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரிடமிருந்தும் 63 கிலோ கேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெயர்கள் ஜாக் சக்கரவர்த்தி (30), அபிஜித் ராய் (28). இருவரும் கொல்கத்தாவிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.
10 கண்ணாடிப் பெட்டிகளில் வைத்து மறைத்து இந்த போதைப் பொருளை இரு இந்தியர்களும் எடுத்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாங்காக் விமான நிலையத்தில் இவ்வளவு அதிகமான போதைப் பொருள் பிடிபடுவது இதுவே முதல் முறை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications