டோரன்டோவில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பகுதியில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டோரன்டோ: ஜி20 மாநாடு நடைபெறவுள்ள கனடாவின் டோரன்டோ மற்றும் தெற்கு ஆன்டாரியோ உள்ளி்ட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஒட்டாவா மற்றும் மான்ட்ரீல் நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் இது 5 ரிக்டராக பதிவானதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 1.40 மணியளவில் தெற்கு ஆன்டோரியோ, கியூபெக், கிழக்கு அமெரிக்க பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கம்பர்லேன்ட் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்து.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். உயர்ந்த கட்டடங்களில் இருந்தவர்கள் வேகம் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications