டெல்லி: இந்திய கம்யூ தலைவர் ராஜாவின் காரை திருடி விற்க முயற்சி!
டெல்லி: இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்குச் சொந்தமான காரைத் திருடி விற்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராஜ்யசபா எம்பியான டி.ராஜாவின் வீடு டெல்லி நாடாளுமன்ற வீதியில் துணை ஜனாதிபயின் இல்லம் அருகே உள்ளது.
இவரது பெயரிலான கட்சிக்கு சொந்தமான ஹோண்டா சிட்டி கார் கடந்த 29ம் தேதி ராஜாவின் வீட்டின் முன் திருடு போய்விட்டது.
இது குறித்து கார் டிரைவர் ராஜப்பன் மூலமாக ராஜா டெல்லி போலீசில் புகார் செய்தார்.
அந்த காரில் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கும் எம்பிக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்துக்குள் அந்தக் கார் நுழைந்துவிடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந் நிலையில் கார் டீலர் ஒருவரிடம் இந்த கார் விற்பனைக்கு வந்தது. நாடாளுமன்ற அனுமதி ஸ்டிக்கரை அகற்றாமலேயே கார் விற்பனைக்கு வந்ததைப் பார்த்து அதிர்ந்த அவர் போலீசுக்கு தகவல் தந்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து காரை மீட்டனர். காரை விற்க முயன்ற யோகேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் முன்பு ராஜாவிடம் டிரைவராக பணியாற்றியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் கட்சிக்காக பரிசாக வழங்கிய கார் இது. இதை பெரும்பாலும் கட்சியின் தேசியச் செயலாளர் பர்தனும் ராஜாவுமே பயன்படுத்தி வந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications