வெறிநாய்கள் போல நடந்து கொண்டு மீனவரை அடித்தே கொன்ற இலங்கை கடற்படையினர்
சென்னை: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சிங்கள கடற்படை காடையர்கள், வெறிநாய்கள் போல நடந்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. மீனவர் செல்லப்பனை சரமாரியாக அடித்தே அந்த ரவுடிக் கும்பல் கொலை செய்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மற்றும் புஷ்பவனம் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் மதியம் சுமார் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
இதில் செல்லப்பன் (50), செல்வராஜ் (45), திருவம்பலம் (22), காளியப்பன் (35) ஆகிய 4 பேர் ஒரு படகிலும், அறிவழகன் (25), சின்னப்பு (35), முருகேசன் (30), இளையராஜா (19) ஆகிய 4 பேர் மற்றொரு படகிலும் கோடியக்கரைக்கும், தோப்புத்துறை கடற்பகுதிக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது படகில் வந்த சிங்கள கடற்படையினர் படகுகளை சுற்றி வளைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வந்த அந்த கும்பல், மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகள், மீன்களை தூக்கி கடலில் வீசினர்.
பின்னர் தங்களிடமிருந்த கயிற்றை எடுத்து தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதிலும் செல்லப்பனை கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பரிதாபமான முறையில் செல்லப்பன் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்து போனார். இதைப் பார்த்த மீனவர்கள் விக்கித்துப் போய் விட்டனர். அதாவது துப்பாக்கிச் சூடு எதையும் நடத்தாமல் அடித்தே கொலை செய்துள்ளனர்.
பி்ன்னர் அறிவழகனின் படகில் ஏறி அங்கிருந்த மீனவர்களின் உடைகளைப் பறித்து நிர்வாணமாக்கி அவற்றை கடலில் வீசி விட்டு ஓடி விடுங்கள் என்று மிரட்டி விரட்டியுள்ளனர்.
புஷ்பவனம் மீனவர்கள் மீ்தும் தாக்குதல்
இதேபோல நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்திலிருந்து சென்ற மீனவர்களையும் ஆடைகளைப் பறித்து நிர்வாணமாக்கி அனுப்பியுள்ளது சிங்கள கடற்படைக் கும்பல்.
தனபாலன் (22), ஜெயபால் (19), முருகானந்தம் (19), அக்கரைப்பேட்டை முருகா (25) ஆகியோர் வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து தமிழக மீனவர்களை தரக்குறைவாக பேசி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டதுடன், மீனவர்களை நிர்வாணப்படுத்தி, கயிற்றால் தாக்கினர். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து போயுள்ளது.
இந்த அளவுக்கு தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்கி விட்டும், கொலை செய்து விட்டும் சாவகாசமாக சென்ற செயல் தமிழக மீனவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications