ப.சிதம்பரம் வருகையை எதிர்த்து விழுப்புரம் காங். கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம்: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விழுப்புரத்திற்கு வரக் கூடாது. வந்தால் அவரை எதிர்ப்பது என விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பார்கள். ஆனால் காங்கிரஸுக்கோ செல்லும் இடமெல்லாம் கோஷ்டிப் பூசல் என்று கூறலாம்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமன் தலைமையில் கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ். திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள காமராஜர் பிறந்தநாள் விழா கூட்டம் மாவட்ட, நகர காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்படாமல் தனிப்பட்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொள்ள கூடாது. இதனையும் மீறி பங்கேற்றால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு எதிராக ப.சிதம்பரம் கோஷ்யினரும் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கள்ளக்குறிச்சியில் வருகிற 18-ந்தேதி காமராஜர் பிறந்தநாள் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொள்வது உறுதி.
விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி எம்.பி. மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொள்கிறார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications