மாயமான ராகுல் காந்தியின் உதவியாளர் காயத்துடன் கண்டுபிடிப்பு

ராகுல் காந்தியின் இளம் நிர்வாகிகள் படையின் முக்கிய உறுப்பினர் நிஷாந்த் படேல். அவர் மர்மமான முறையில் ஹர்தாயில் உள்ள தனது ஹோட்டல் அறையில் இருந்து காணாமல் போனார். அவரை கடைசியாக நேற்று காலை 5 மணிக்கு பார்த்துள்ளனர். நிஷாந்தின் அறையில் அவரது உடைமைகள் சிதறிக் கிடந்தது. அவர் செல்போனும் அங்கு தான் இருந்தது.
இது குறித்து ஹர்தாய் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கௌதம் கூறுகையில்,
நிஷாந்த் கோட்வாலி பகுதியில் உள்ள உத்சவ் ஹோட்டலில் தங்கி இருந்தார். அவர் எந்த பொருளையும் எடுத்துச் செல்லவில்லை. அவர் செல் போன் உட்பட அனைத்து பொருட்களும் அறையில் தான் உள்ளது.
அவர் திங்கட்கிழமை இரவு சாப்பிடும் போது எல்லோரிடமும் நன்றாக பேசியுள்ளார். நாங்கள் அவரை தேடிக் கொண்டிருக்கிறோம். அவர் திடீரென்று காணாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
நிஷாந்த், குஜராத் முன்னாள் முதல்வர் ஹஸ்முக் பாய் படேலின் மகன். மிஷன் 2012-ஐ இவர் பொறுப்பில் விட்டுள்ளார் ராகுல் காந்தி. நிஷாந்த் காணாமல் போனதற்கு முன் அவரை சந்தித்த காங்கிரசார் அவர் வருத்தமாக இருந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீர் பால் சிங் கூறியதாவது,
அவர் தற்போது எங்குள்ளார் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் எங்கள் அமைப்பின் தலைவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளோம். நாங்களும் அவரை தேடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளோம். அவர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். திங்கட்கிழமை இரவு நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் உணவு உண்டோம். அதன் பிறகு அவரவர் அறைகளுக்கு சென்றுவிட்டோம் என்று அவர் கூறினார்.
நிஷாந்தைதக் கண்டுபிடிக்க போலீஸார் முடுக்கி விடப்பட்டனர். இந்த நிலையில் இன்று அவர் லக்னோவில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டார். நெற்றியில் காயத்துடன் புத்தீஸ்வரன் செளராஹா பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அவரை போலீஸார் மீட்டனர்.












Click it and Unblock the Notifications