தமிழ் செம்மொழி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை
டெல்லி: கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்களவையில் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, மக்களவையில் திமுக உறுப்பினர் தாமரைச் செல்வன் பேசுகையில்,
கோவையில் உலகம் போற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
தமிழ் மொழியை நாட்டின் அதிகாரப்பூர்வமான மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்திற்கு வழங்கப்பட்டது போல தமிழ்மொழியின் ஆராய்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மொழிகளில் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் கல்வெட்டு எழுத்துகளில் 60,000 தமிழ்மொழியில் உள்ளது. எனவே, தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை சென்னையில் அமைக்க வேண்டும்.
கடலில் மூழ்கிய குமரிக் கண்டம் மற்றும் பூம்புகார் ஆகியவற்றிற்காக ஆழ் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியை மேற்கொள்ள மத்திய அரசு விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications