வன்னியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற முயற்சி
கொழும்பு: வன்னிப் பகுதியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற இலங்கை அரசு முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியான சுரேஷ் பிரமேச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
அவர் கூறுகையி்ல், தமிழர் பிரச்சனைக்கு முறையான அரசியல் தீர்வை ஏற்படுத்த இலங்கை அரசு முயல வேண்டும். தமிழ் மக்களுக்கு நன்மை சேர்க்கும் வகையில் செயல்படும் தமிழர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோம்.
கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்துவது குறித்து வலியுறுத்தவில்லை.
வன்னியின் பெரும் பகுதிகள் ராணுவத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
வன்னிப் பகுதியில் ராணுவத்தினரோடு சுமார் 4 லட்சம் சிங்களர்களையும் இலங்கை அரசு குடியமர்த்த முயற்சித்து வருகிறது. இதன்மூலம் இந்திய அரசுக்கும், தமிழ் கூட்டமைப்புக்கும் அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறி வருகிறது.
இலங்கை வரவுள்ள இந்திய சிறப்புத் தூதர், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் குடியமர்வு செய்யப்பட்ட பகுதிகளை இலங்கை அரசின் வழிகாட்டுதலின்றி, இந்தியத் தூதரின் துணையோடு பார்வையிட வேண்டும் என்றார்.
பிரபாகரன் தாயாருடன் தமிழ் கூட்டமைப்பு எம்.பி. சந்திப்பு:
இந் நிலையில் இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீதரன் சந்தித்தார்.
இப்போது பருத்தித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பார்வதியம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின்போது, மருத்துவமனையின் தலைமை அதிகாரி மயிலேறு பெருமாள், ஸ்ரீதரனிடம் பார்வதியம்மாளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications