22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

திசையன்விளை: திசையன்விளை அருகே கரிசல் கிராமத்தில் நேற்று மாலை ஒரு வயது குழந்தை முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் திடீரென கண்கள் சொருகிய நிலையில் கழுத்து மேல்நோக்கி இழுத்துக் கொண்டு மயங்கி சரிந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். இதனால் மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாரிமுத்து, அனுசியா, மோனிசா, ரெஜிலா, விஜயகுமார் உள்பட 22 குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில்,

நேற்று முன்தி்னம் இரவு அங்குள்ள அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. அப்போது வழங்கப்பட்ட சர்க்கரை பொங்கலை சாப்பிட்டதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.

பெற்றோர் கூறுகையில், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டோம். ஆனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாய்பால் குடிக்கும் குழந்தை முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் வரை திடீரென இவ்வாறு மயங்கி விழுந்துள்ளனர். சர்க்கரை பொங்கல் சாப்பிடாத குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+