சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் சமாதி அருகே மர்ம பிணம்
மேட்டூர்: மேட்டூர் அருகில் மூலக்காடு கிராமத்தில் வீரப்பன் சமாதி அருகே மர்ம நபரின் பிணம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டூரை அடுத்த கொளத்தூர் மூலக்காடு கிராமத்தில் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் சமாதி உள்ளது. இந்த சமாதி அருகே ஒரு பிணம் மண்ணில் புதைத்தும் புதைக்கப்படாமலும் கிடந்தது. அதன் கால் பகுதி மட்டும் வெளியே தெரிந்ததால் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது, கழுத்து அறுபட்ட நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அங்கு புதைக்கப்பட்டது தெரிய வந்தது. அவரது வலது மார்பில் ரேவதி என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. அந்த வாலிபரைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இவர் கொலை செய்யப்பட்டு 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிய வந்தது.
இதனையடுத்து, தாசில்தார் முன்னிலையில் அந்த வாலிபரின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, பின்பு அந்த உடல் அந்த இடத்திலே புதைக்கப்பட்டது. இந்த மர்ம கொலை குறித்து கொளத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications