லடாக்: வெள்ளத்தில் சிக்கிய 33 ராணுவ வீரர்கள் கதி என்ன?

லே மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மேகங்கள் வெடித்து கனமழை கொட்டித் தீர்த்தது. Cloud burst என்ப்படும் இந்த இயற்கை சீற்ற நிகழ்வால் ஒரு மணி நேரத்தில் 250 மி.மீ. பேய் மழை பெய்தது.
இதனால் அந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் லே பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகள், கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. சாலைகளும் பெயர்த்தெடுக்கப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன.
இந்த வெள்ளப் பெருக்கில் லே பகுதியில் 160 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால், மேலும் 600க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இவர்கள் உயிரோடு புதையுண்டு இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
லே பகுதியை வெள்ளம் பாதித்த அதே நாளில் லடாக் பகுதியில் சியாச்சின் பனிமலையிலும் கன மழை பெய்தது. அங்கு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 33 ராணுவ வீரர்கள் ஷையோக் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
எனவே அந்த ராணுவ வீரர்களை கண்டுபிடிக்க பாகிஸ்தானின் உதவியும் கோரப்பட்டுள்ளது. வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்த்து போராடுவதற்கான பயிற்சிகளை அந்த ராணுவ வீரர்கள் பெற்றிருந்த போதிலும் அவர்களுடைய கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை.
3 நாட்கள் ஆன பிறகும் வீரர்களை கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள் இறந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. ஆனாலும் அதுபற்றி இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.
காணாமல் போன ராணுவ வீரர்கள் 15வது பிகார் காலாட் பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதற்கிடையே லே பகுதியில் எஸ்எம்எஸ் சேவையை ஜம்மு-காஷ்மீர் அரசு மீண்டும் அனுமதித்துள்ளது. தொடங்கியுள்ளது. முன் பாதுகாப்பு காரணங்களுக்காக அப் பகுதியில் செல்போன் சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தன.
இப்போது வெள்ள பாதிப்பால் லே பகுதியே தத்தளிக்கும் நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவுவதற்காக எஸ்எம்எஸ் சேவையை அரசு அனுமதித்துள்ளது.
சீனாவிலும் ஆயிரக்கணக்கில் பலி:
இந் நிலையில் சீனாவில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 1,300 பேருக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.
அவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் கன்சூக் மாகாணத்தில் திபெத்திய தன்னாட்சிப் பகுதிக்கு உட்பட்ட கன்னான் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத பேய் மழை பெய்து வருகிறது. இதில் 127 பேர் பலியாகி உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications