லெனினை கைது செய்ய கோரும் நித்யானந்தா ஆதரவாளர்கள்!

பெங்களூர் பிடதியில் ஆசிரமம் அமைத்து நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரும் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருந்த காட்சிகளை முழுவதுமாக படம் பிடித்து அதை வீடியோவாக வெளியிட்டார் லெனின். போலீசாருக்கும் அந்த சிடிக்களை அவர் கொடுத்தார்.
இது தொடர்பாக நித்யானந்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். தற்போது அவர் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி வழக்கமான பூஜைகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் நூற்றுக்கணக்கானோர் பெங்களூர் ராம்நகரில் உள்ள காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது முன்னாள் சீடர் லெனின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அப்போது அங்கு எஸ்பி இல்லை. இதைத் தொடர்ந்து அங்கு மனு கொடுத்து விட்டு திரும்பினார்கள்.
இதற்கிடையே, பிடதி ஆசிரமம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "நித்யானந்தா மீது பொய் புகார் கூறிய லெனின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 முறை சீடர்கள் கோரிக்கை விடுத்தனர். தனிப்பட்ட முறையிலும் லெனின் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதில் அவர் தொடர்ந்து ஆசிரமம் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.
நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடந்தபோது இது பற்றி பிடதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் கூறினர்..." என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications