மக்கள் விரும்பும் நல்ல கட்சிகளுடன் கூட்டணி: விஜயகாந்த்

திண்டிவனத்தில் தேமுதிக பிரமுகரின் திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசுகையில்,
கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களிலும் விழுப்புரம் மாவட்டத்தில் தேமுதிக அதிக வாக்குகள் பெற்றது . அதற்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் தொண்டர்களை தெய்வமாக மதிக்கிறேன். குடும்பத்தில் ஆண் தவறு செய்தால் பெண் விட்டுக் கொடுக்க வேண்டும். நானும் எனது மனைவியும் சந்தோசமாக இருப்பதற்கு விட்டு கொடுப்பதுதான் காரணம்.
விருத்தகிரி படப்பிடிப்பு முடியும் தருவாயில் அரசியல்வாதிகள் என்னை பற்றி ஏதேதோ பேசி வம்புக்கு இழுக்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்லும் வாய்ப்பாக இந்த திருமண விழா அமைந்துவிட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பின் வந்தவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் எந்த வகையில் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள்?.
ஓட்டுக்காக இலவச டி.வி., இலவச கேஸ் அடுப்பு, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கியுள்ளோம் என்றும் தற்போது விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் என்றும் கலைஞர் கூறுகிறார். மின்சாரம் இல்லை, அதனால்தான் இதைக் கொடுக்கிறார்.
தமிழ்நாட்டில் 62 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஆனால் கலைஞர் 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்ததாகக் கூறுகிறார். இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதற்காக எந்த திட்டத்தையாவது கலைஞர் கொண்டு வந்துள்ளாரா?.
என்னைக் கண்டு கலைஞருக்கு பயம். நான் பெரிய குத்தூசி. நான் உங்களிடம் கூட்டணிக்காக என்றைக்காவது தூது விட்டேனா? நான் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லையே?.
வரும் தேர்தலில் மக்கள் விரும்பு நல்ல கட்சிகளுடன் நான் கூட்டணி அமைப்பேன். எக்காரணம் கொண்டும் இனி திமுக ஆட்சிக்கு வராது.
நான் தனியாக ஆட்சி அமைக்க முடியாதா? நான் இருக்கிறேன், உங்களை நான் கைவிடமாட்டேன். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.
10 எம்.எல்.ஏ, 10 எம்.பிக்களுக்காக நான் கட்சி நடத்தவில்லை. ஏழைகளுக்காக கட்சி நடத்துகிறேன். 2 கட்சிகளும் ஊழல் செய்துள்ளன. தேமுதிகவிடம் ஆட்சியை ஒப்படைத்து பாருங்கள், நல்லாட்சியை தருவேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications