கேரளாவில் வெளி மாநில லாட்டரிகளுக்குத் தடை
கொல்லம்: வெளிமாநில லாட்டரிக்களுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கேரள அரசு லாட்டரிகள் தவிர பூட்டான், சிக்கிம் உள்ளி்ட்ட பல்வேறு மாநில லாட்டரிகளும் விற்கப்படுகிறது. தமிழக-கேரள எல்லையில் மட்டும் தலா 50 லாட்டரி கடைகள் இயங்கி வருகின்றன.
மேலும், மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாட்டரி கடைகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் லாட்டரி வியாபாரத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் கேரள அரசுக்கு உரிய வரி செலுத்தவில்லை என்பதால் கடந்த மாதம் முதல் இம்மாநில அரசு அனைத்து வெளிமாநில லாட்டரிகளுக்கும் தடை விதித்தது.
இதில் கேரள அரசின் வின், வின் பம்பர் லாட்டரியும், திருவோணம் சிறப்பு பரிசு சீட்டையும் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் எல்லைகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். கேரளாவில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளதால் எல்லைகளில் உள்ள போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications