தெலுங்கானாவில் பந்த்-தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி ஆதரவு-பஸ்கள் மீது தாக்குதல்
ஹைதராபாத்: ஏபிபிஎஸ்சி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தெலுங்கானா பந்த் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் அரசுப் பேருந்துகளை இலக்காக வைத்து கற்களை வீசித் தாக்கினர்.
உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய இந்த ஒரு நாள் பந்திற்கு தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
காலை 9.30 மணிக்கு பந்த் தொடங்கியது. போராட்டக்காரர்களும், மாணவர்களும் ஆந்திர பிரதேச அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை குறி வைத்தனர். குறிப்பாக ஹைதராபாத், கரிம் நகர் மற்றும் தெலுங்கானாவில் உள்ள மற்ற நகரங்களில் ஓடும் பேருந்துகளை சேதப்படுத்தினர்.
கரிம் நகரில் ஒரு பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் பேருந்துகளின் மீது கற்கள் வீசப்பட்டன.
இன்று நடக்கும் ஆந்திர பிரதேஷ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை எதிர்த்து தான் இந்த பந்தை மாணவர்கள் நடத்தினர். பந்த்தையொட்டி ஹைதராபாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications