32 பேருக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் உதவித் தொகை அளித்தார் கருணாநிதி
சென்னை: முதல்வர் கருணாநிதி ஏழை, எளியோருக்கு மருத்துவம் செய்துகொள்ளவும் மற்றும் கல்வி கற்கவும் 32 பேருக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் நிதியுதவி அளித்தார்.
இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
கருணாநிதி தன் பெயரில் துவங்கப்பட்ட கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்கு தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 கோடி அளித்தார். இந்தத் தொகை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டது.
இதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் வட்டி ஏழை மக்களுக்கு நிதியுதவியாகக் கொடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நிதியுதவி அளிக்கப்பட்டது.
வைப்பு நிதியில் போடப்பட்ட ரூ.5 கோடியில் இருந்து ரூ.1 கோடியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்திற்கு அளிக்குமாறு கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி அளிக்கப்பட்டத் தொகை போக எஞ்சிய ரூ. 4 கோடிக்கு கிடைக்கும் வட்டித் தொகை எளியோருக்கு வழங்கப்படுகிறது. இது கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை அளிக்கப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.1 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ஆகும். கடந்த மாதம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வட்டியாகக் கிடைத்தது. இதை கருணாநிதி 32 பேருக்கு மருத்துவம் மற்றும் கல்விச் செலவிற்கு நிதியுதவியாக அளித்தார். இதைப் பெறுவதற்காக மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு வந்து செல்லும் சிரமத்தைக் குறைக்க அவர்களுக்கு காசோலை அனுப்பப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications