என்ஜின் கோளாறு-கொல்லம் ரயில் நடுவழியில் நின்றது
மார்த்தாண்டம்: என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொல்லம் பயணிகள் ரயில் பாதியிலேயே நின்றது.
மதுரையில் இருந்து கொல்லம் செல்லும் பயணிகள் ரயில் நேற்று முன்தினம் வழக்கம்போல் காலை 5.20 மணிக்கு குழித்துறை (மார்த்தாண்டம்) ரயில் நிலையம் வந்தது. சிறிது நேரத்திற்குப் பின் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது. குழித்துறை மேற்கு ரயில் நிலையம் (கழுவன்திட்டை) பாலம் பகுதியில் வரும்போது என்ஜினில் திடீரென்று கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் நின்றது.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வந்து பொருத்தியதை அடுத்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. திருவனந்தபுரம் சென்றதும் அங்கு பழுதான என்ஜின் மாற்றப்பட்டு அங்கு இருந்து கொல்லம் புறப்பட்டுச் சென்றது.
இதனால் பயணிகள் 2 மணி நேரம் அவதிப்பட்டனர். திடீரென என்ஜின் பழுதானதால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் செல்லும் 2 பயணிகள் ரயில், கன்னியாகுமரி-மும்பை செல்லும எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை-ஹப்பா செல்லும் ரயில் ஆகிய 4 ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. நெல்லை-ஹப்பா ரயில் மார்த்தாண்டத்தில் 20 நிமிடம் நின்று சென்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications